கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இருப்பினும், கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் வைரஸ் பரவலை பெரிய அளவில் கட்டுப்படுத்தியுள்ளன.
குறிப்பாக ஒடிசாவில் இதுவரை 60 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு உயிரிழப்பு சம்பவம் மட்டுமே நிகழந்துள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நேற்று மட்டும் 843 பேரின் ரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
1,197 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக ஏப்ரல் 14ஆம் தேதி ஐந்து பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நோயின் தாக்கம் 27 மாவட்டங்களில் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை அமைச்சகம்