ETV Bharat / bharat

“குடியரசுத் தலைவரை சந்திப்பதால் எந்தவொரு பலனும் ஏற்படப்போவதில்லை” - திக்விஜய் சிங் - மத்திய அரசு Vs 24 அரசியல் கட்சி

இந்தூர் : புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதால் எந்தவொரு பலனும் ஏற்படப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்
author img

By

Published : Dec 9, 2020, 4:50 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

குறிப்பாக, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் பனியிலும், கடும் குளிரையும் பாராமல் 14 ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு ஐந்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டுக் குழு வருகின்ற 9ஆம் தேதி மாலை 5 மணி அளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் பொலிட்பீரோ உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சிகளின் கூட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து தலைவர்களுக்கு மட்டுமே ராஷ்டிரபதி பவன் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, 24 அரசியல் கட்சிகளில் கூட்டமைப்பான கூட்டுக்குழுவின் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் இடம்பெறுவர் என அறியமுடிகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங், “விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக 24 அரசியல் கட்சிகளின் குழு இன்று குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளது. ஆனால், மேன்மைத் தாங்கிய இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மீது எனக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை. அவரை சந்தித்துப் பேசுவதால் பலன் ஏற்படப்போவதில்லை.

  • राष्ट्रपति जी से किसान विरोधी क़ानून को वापस लेने के लिए 24 राजनैतिक दलों का डेलीगेशन आज मिलने जा रहा है। मुझे महामहिम जी से कोई उम्मीद नहीं है। इन 24 राजनैतिक दलों को NDA में उन सभी दलों से भी चर्चा करना चाहिए जो किसानों के साथ हैं। नितीश जी को मोदी जी पर दबाव डालना चाहिए

    — digvijaya singh (@digvijaya_28) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விவசாயிகளின் கோரிக்கை ஆதரிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் உள்ள அனைத்து குழுக்களுடனும் இந்த 24 அரசியல் கட்சிகள் கலந்துரையாட வேண்டும். ஒட்டுமொத்த நாட்டையும் பாஜக சூறையாடுகிறது.

அவர்கள் முத்தலாக், லவ்-ஜிஹாத், என்.சி.ஆர்., குறித்து மட்டும் தான் கவலைப்படுகிறார்கள். பிரதமர் மோடிக்கு பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் மக்களுக்கு நன்றி சொன்ன நட்டா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.