ETV Bharat / bharat

குஜராத் கார்பா நடனம் கிடையாது : நவராத்திரிக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு! - குஜராத் மாநில அரசு

அகமதாபாத் : கரோனா பரவல் காரணமாக நவராத்திரி கார்பா நடனத்திற்குத் தடை விதித்து, குஜராத் மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

குஜராத் கர்பா நடனம்
குஜராத் கர்பா நடனம்
author img

By

Published : Oct 9, 2020, 6:43 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற கார்பா நடனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவராத்திரி கொண்டாட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்களையும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதில்,

  • ஒன்பது நாள் திருவிழாவின்போது மாநிலத்தில் கார்பா நடனத்திற்கு அனுமதி கிடையாது.
  • நவராத்திரியின்போது பிரார்த்தனை கூட்டங்களுக்கு அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
  • பிரார்த்தனைக் கூட்டங்களில் 200 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.
  • பிரார்த்தனைக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
  • பிரார்த்தனைக் கூட்டத்தில் கார்பா நடன நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.
  • முக்கியமாக, பிரார்த்தனைக் கூட்டத்தில் சமூக விலகல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  • பிரார்த்தனைக் கூட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள், கர்ப்பிணிகள் கலந்துகொள்ளக் கூடாது.
  • நவராத்திரி நிகழ்வில் ராவணன், ராம்லீலா யாத்ரா பேரணிகளுக்கு அனுமதி கிடையாது.
  • இந்த நடைமுறைகள் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹெல்மெட் அணிந்து கர்பா நடனமாடி அசத்திய கலைஞர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.