நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், இன்று மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் உள்ள கடன், கல்விக் கடன் தள்ளுபடி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பதிலளித்த நிர்மலா சீதாராமன், கல்விக் கடன் தள்ளுபடிக்கான எண்ணம் மத்திய அரசுக்கு தற்போதைக்கு இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கடந்த மூன்றாண்டுகளில் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் கல்விக் கடன் தொகை 67 ஆயிரத்து 685 கோடி ரூபாயிலிருந்து 75 ஆயிரத்து 450 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். மேலும், மாணவர்கள் கடனை திருப்பி அளிக்க கோரி துன்புறுத்தப்பட்டதாக ஒரு புகாரும் இதுவரை எழவில்லை எனத் தெரிவித்த அவர் , கடன் வாங்கியவர்கள் வேலை பெற்று வருவாய் ஈட்டிய பின்னர் கடனை திருப்பியளிக்க தொடங்கினால் போதும் என்ற வகையிலேயே விவகாரம் கையளப்படுவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: சசிகலாவை விடுதலை செய்யக்கோரி நடுரோட்டில் வீச்சரிவாளுடன் இளைஞர் ரகளை