கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவுத் தொடங்கியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய நிலையில், இப்போதைய நேரத்தில் சீனாவை விட இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் விரைவாகப் பரவிவருகிறது.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், கொரோனா குறித்து சில தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. 'வெப்பநிலை குறைவாக உள்ள நாட்டில்தான் கொரோனா பரவும்; வெப்பநிலை அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவாது' என்பதுதான் அந்த வதந்தி.
இது தொடர்பாக நிபுணர்கள், ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்குத்தான் கொரோனா பரவும் என்றும் இதற்கும் வெப்பநிலைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பியவருக்கு கொரோனா!