இது தொடர்பாக, புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் தற்போது வரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 574ஆக உள்ளது. நேற்று புதிதாக கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை.
நேற்று ஒரே நாளில் 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 141ஆக உள்ளது. இதில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 277ஆக உள்ளது.
பூரண குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 290ஆக உள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.