புதுச்சேரி: புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ். இவரின் 25 ஆண்டுகால மக்கள் பணிக்கான வெள்ளி விழா மற்றும் சிறந்த எம்.எல்.ஏவாக மூன்றாம் முறை தேர்வு செய்யப்பட்டதற்காக விருது வழங்கும் விழா அரசு சார்பில் இன்று ஏனாமில் நடைபெற்றது.
இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, ஆந்திரா சபாநாயகர் தமினேனி சீதாராம், புதுவை அமைச்சர்கள், ஆந்திர மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில், வரும் தேர்தலில் ஏனாம் தொகுதியில் நான் போட்டியிடப்போவதில்லை, என்னுடைய குடும்பத்தில் இருந்தும் யாரும் போட்டியிட மாட்டார்கள் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், தனது ஆதரவாளர்களுடன் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசில் இணையப்போவதாக மல்லாடி கிருஷ்ணராவ் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: பழனிசாமி முதலமைச்சரானது சரித்திர விபத்து - கார்த்தி சிதம்பரம்