கரோனா ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன், எஸ்.கே கவுல், எம்.ஆர். ஷா ஆகியோரின் அமர்வு இரு தரப்பு வாதங்களையும் கேட்டது.
அதன் பின்னர் நீதிபதிகள் பேசுகையில், “இதுபோன்ற சவாலான சூழல்களில் தொழிலாளர்கள் மட்டுமல்லாது வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. எனவே, குறைந்தபட்ச ஊதியத்தொகையை வழங்குவது குறித்து இரு தரப்பினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதை அந்தந்த மாநில அரசுகள் முன்னிற்று நடத்திக் கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் முடிந்த பின்னர், மாநில அரசுகள் உரிய விவரங்களை தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: எரிவாயுக் கிணறு தீ விபத்து - உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்தது அசாம் அரசு