ETV Bharat / bharat

பிரணாப் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No change in Mukherjee's health condition: Hospital

author img

By

Published : Aug 18, 2020, 12:53 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு (84) கடந்த 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து மருத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி, பிரணாப் கோமா நிலையில் உள்ளார்.

இந்நிலையில், இன்று (ஆக. 18) இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராணுவ மருத்துவமனை நிர்வாகம், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...எஸ்.பி.பி. குணமடைய கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.