கங்கை நதி சுமார் 50 கோடி மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரமாக திகழ்கிறது. இந்நிலையில், கங்கை உலகத்தில் அதிக சீர்கேடடைந்த நதிகளில் 6ஆவது இடத்தை வகிக்கிறது.
இதையடுத்து கங்கை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது.
மூன்று ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு உதவ உலக வங்கி முன்வந்துள்ளது.
2021ஆம் ஆண்டு தொடங்கப்படும் இந்தத் திட்டம் ஐந்து ஆண்டுகள் நடைபெறும். அதாவது 2026ஆம் ஆண்டு நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் ஒரே நாளில் 7 பேர் கரோனாவால் உயிரிழப்பு