ETV Bharat / bharat

தெலங்கானாவில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - தேர்தல் ஆணையம்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படவிருப்பதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நிஜாமாபாத் மக்களைத்தொகுதி
author img

By

Published : Mar 29, 2019, 10:38 AM IST

தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 17 நாடாளுமன்றத்தொகுதிகளில் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட 200க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் 185 பேர் களத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதேபோல் கடந்த ஜனவரி மாதம் கிராம பஞ்சாயத்து தேர்தலில் வாக்குச்சீட்டு முறை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி, மார்ச் 29&
திருச்செந்தூர் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ அடிப்படையில் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 
தூத்துக்குடியில் பார்லி., தொகுதியில் தி.மு.க., சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் கனிமொழி வாக்காளர்களை சந்திக்கும் போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவருடன் வரும் தி.மு.க., தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுப்பது போல் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக டி.வி.க்களில் செய்தி வெளியானது. இதற்கிடையே தேர்தல் விதிமுறைகளை மீறி  திருச்செந்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுக்கும் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பறக்கும் படை தாசில்தார் முத்துராமலிங்கம் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க., வேட்பாளர் கனிமொழி உட்பட 8 பேர் மீது 143, 171(ஹெச்), 171(இ) ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இது தொட்பாக இன்ஸ்பெக்டர் முத்துராமன் விசாரணை நடத்தி வருகிறார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.