நிவர் புயல் காரணமாக, புதுச்சேரி மீனவர்கள் நவ. 20ஆம் தேதியிலிருந்து கடலுக்குச் செல்லவில்லை. புயலின்போது துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சில மீனவர்களின் படகுகள் முழுமையாகவும், 100-க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் பாதியாகவும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் தேங்காய்த்திட்டு துறைமுக வளாகத்தில் விசைப்படகு உரிமையாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விசைப்படகு உரிமையாளர் சங்க நிர்வாகி போத்திராஜ், "புயல் பாதிப்பு காரணமாக கடந்த 11 நாள்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
அதற்கான நிவாரணத்தை மத்திய- மாநில அரசுகள் வழங்க வேண்டும். அத்துடன் சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி வழங்கப்படவில்லை என்றால், தொடர் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடையை மீறி கடலுக்குச் சென்ற மீனவர்கள் 54 பேர் மீது வழக்குப் பதிவு...!