ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் ஜாரிகான் தொகுதியில் அங்கன் வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன் வாடி வாளகத்தின் வெளிப்பகுதி, வகுப்பறை சுவற்றில் ரயில் பெட்டி போல வரையப்பட்டுள்ளது. இது வெளியில் பார்ப்பதற்கு பள்ளி வளாகத்தில் ரயில் பெட்டி நிற்பது போன்று அழகாக காட்சியளிக்கிறது. இது மாணவர்களை, பெற்றோர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது. இது குறித்து, நிதி ஆயோக் தனது ட்வீட்டர் பக்கத்தில் " அனைவரையும் கவரும் வகையில் திறமையாக வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கன்வாடியை அமைத்துள்ளார். இதன் மூலம் பள்ளியின் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்" என பதிவிட்டுள்ளது.
அங்கன் வாடி ஆசிரியை ஒருவர் இது குறித்து கூறுகையில், இந்த மாவட்டத்தில் இன்னும் ரயில் இணைப்பு இல்லை, எனவே ரயிலைப் பற்றி குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவதே அங்கன்வாடி ரயிலின் வடிவமைக்கப்பட்ட நோக்கம் என்றார்.