கரோனா வைரஸ் தொற்று இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில், டெல்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அலுவலர் கடந்த வாரம் வரை நிதி ஆயோக் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் பணிபுரிந்துள்ளார்.
அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கடந்த 28ஆம் தேதி நிதி பவன் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலருக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அந்த அலுவலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருடன் நெருங்கிப் பழகிய அலுவலர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான மருத்துவக்குழு, மேலாண்மைக் குறித்த அதிகார ஆலோசனைக் குழு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அலுவலர் அமிதாப் காந்த் தலைமையில், சர்வதேச அமைப்புகளும் நிதி பவனில் செயல்பட்டு வருகின்றனர். அண்மையில், விஞ்ஞானி ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரண்டாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு: முழு விவரம்