ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடைபெற்ற பாலியல் வல்லுறவு சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ் குமார், பவன் குப்தா அக்ஷய் குமார் ஆகியோருக்கு ஜனவரி 22ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது.
தூக்குத் தண்டனை தேதியை ஒத்திவைக்குமாறு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார், கூடுதல் அமர்வு நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், முகேஷின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை (ஜனவர் 17) நிராகரித்ததாக அரசு வழக்கறிஞர் இர்பான் அகமது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, குற்றவாளிகள் பிப்ரவரி 1ஆம் தேதி காலை ஏழு மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வாரம் கழித்துதான் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்பது மாநில அரசின் விதி.
இருப்பினும் மற்ற குற்றவாளிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் கருணை மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்பதால் தூக்குத் தண்டனை தேதி மேலும் தள்ளிப்போகலாம்.
இதையும் படிங்க: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிலக்கரிதான் எரிபொருள்