நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நாளை தூக்கிலிடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் தூக்குத் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது ஒத்திவைத்துள்ளது. குற்றவாளிகள் நால்வரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருந்தார்.
குற்றவாளி குப்தாவின் குறைதீர்வு மனுவை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தள்ளுபடி செய்தது. அதேபோல், பவன் குப்தா, அக்சய் ஆகிய குற்றவாளிகள் தூக்கை ஒத்திவைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், குற்றவாளிகளுக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு!