நிர்பயா கொலைக் கைதி வினய், டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த சனிக்கிழமை அளித்திருந்தார். அந்த மனுவில் தமது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தலை, தோள்பட்டையில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி தர்மேந்திரா ரானா, வினயின் மனு மீது திகார் சிறை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இது குறித்து திகார் சிறை நிர்வாக வட்டார தகவல்கள், “வினய் தனது கையைத் தானே காயமுற செய்தார். மேலும் சிறைச்சுவரில் தலையால் முட்டிக்கொண்டார்” எனக் குறிப்பிடுகின்றன.
நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் படுகொலை வழக்கில் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் (26), அக்ஷய் குமார் (31) ஆகியோருக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் கறுப்பு உத்தரவை மூன்றாவது முறையாக நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி அறிவித்தது. இந்த உத்தரவின்பேரில் நால்வரும் வருகிற 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளனர்.
இதையும் படிங்க : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு