டெல்லியில் ஒடும் பேருந்தில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற துணைநிலை மருத்துவ மாணவி கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த பாலியல் கொலை குற்றத்தில் ஈடுபட்ட முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26) முகேஷ் ஆகிய நால்வருக்கு நீதிமன்றம் உச்சப்பட்ச தண்டனை விதித்துள்ளது.
அதன்படி நால்வரும் வரும் 3ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நால்வரும் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றத்தில் வழக்கு, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பிவருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுவருகிறது. இதையடுத்து நால்வரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஒரே குற்றத்தில் ஈடுபட்ட நால்வரையும் எப்படி தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்க முடியும்? என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
இதையடுத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு நீதிபதி பானுமதி, அசோக் பூஷண், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் வருகிற 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டனர். நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் ஒரே நேரத்தில் மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கில் மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்ற முடியாது என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை - காங்கிரஸ்