நிர்பயா பாலியல் படுகொலை வழக்கில் நீதிமன்றத்தால் உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் வினய் சர்மாவும் ஒருவர். இவர் டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தனக்கு மனநிலை, மனச்சிதைவு பாதிப்பு இருப்பதாகவும் தனது தலை, தோள்களில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என திகார் சிறை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ் தொடர்பாக பதிலளித்த திகார் சிறை நிர்வாகம், வினய் சர்மா நன்றாக இருப்பதாகவும் சம்பவத்தன்று அவர் தனக்குத் தானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். தலையால் சுவரில் முட்டிக்கொண்டார் என்று விளக்கம் அளித்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். தூக்கு தண்டனை கைதி வினய் சர்மா தனக்கு டெல்லி மனிதநேய அறிவியல் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரும் வருகிற (மார்ச்) 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படுகின்றனர். நிர்பயா வழக்கில் மற்றொரு கைதியான பவன் மட்டும் இதுவரை கடைசி நிவாரண மனு, கருணை மனு உள்ளிட்ட சட்ட உதவியைக் கோரவில்லை.
இதையும் படிங்க: நான் பைத்தியம்... நான் பைத்தியம்...! நிர்பயா கொலைக் கைதி புதிய மனு!