இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் 9 பேர், இந்திய சுற்றுலா வழிகாட்டி ஆகியோர் மத்தியப் பிரதேசம் மாநிலம் கஜூராஹோவில் சுற்றுலா மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சம் நிலவியது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தற்போது அவர்கள் டெல்லி செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்றிரவு (புதன்கிழமை) இரவு அவர்கள் டெல்லி சென்றனர்.
இது குறித்து சத்தாப்பூர் மாவட்ட ஆட்சியர் ஷீலேந்திர சிங் கூறுகையில், “அவர்கள் தங்களின் சொந்த முயற்சியில் இத்தாலி திரும்ப விரும்பினர். அவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன” என்றார்.
இதையும் படிங்க: கொரோனா அச்சத்தால் மக்கள் பீதி: உஷார் நிலையில் தெலங்கானா