ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து குழந்தைகளின் உறவினர்கள் தெரிவிக்கையில், மருத்துவமனையின் அலட்சியத்தின் காரணமாகத்தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்றனர். ஆனால், குழந்தைகளின் இந்தத் திடீர் இறப்பிற்குக் காரணம் எது என்று தெரிவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும், குழந்தைகளின் இந்தத் திடீர் இறப்பைக் கண்டறிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.சி.சி. துலாராவின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் டாக்டர் ரகு சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்பது குழந்தைகளில், மூன்று குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளால் இறந்தனர். மீதமுள்ள குழந்தைகள் திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி (SIDS) காரணமாக இறந்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதேபோன்று 2019ஆம் ஆண்டில் மட்டும் அந்த மருத்துவமனையில் மொத்தம் 963 குழந்தைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...பிரதமர் மோடி அணிந்த மாஸ்க்; தற்சார்பு தொழில்; கர்நாடக தொழில்முனைவோரின் கதை