ETV Bharat / bharat

தெலங்கானா: கிணற்றிலிருந்து ஒன்பது உடல்கள் கண்டெடுப்பு - west bengal migrants in telangana

தெலங்கானா: வாரங்கல் மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒன்பது நபர்களின் உடல்கள் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

west bengal migrants
dead bodies found in the well
author img

By

Published : May 22, 2020, 2:00 PM IST

Updated : May 22, 2020, 4:02 PM IST

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோரேகுந்தா பகுதியில் உள்ள கிணற்றில் சந்தேகத்திற்கிடமாக ஒன்பது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. நேற்று (மே 21), உள்ளூர்வாசிகள் நான்கு உடல்களைக் கண்டுபிடித்தனர். இந்நிலையில், மேலும் ஐந்து உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வாரங்கலில் உள்ள சிவநகர் பகுதியில் வசித்து வந்தனர்.

கரோனா வைரஸ் ஊரடங்கால் அவர்கள் கடந்த சில நாள்களாக ஒரு அறையில் வசித்து வந்தனர். உடல்களை குடும்பம் வாரியாக அடையாளம் கண்டுபிடித்த காவல் துறையினர், நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் உடல்களை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி!

Last Updated : May 22, 2020, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.