ETV Bharat / bharat

பிரெஞ்சு தேசிய தினம்: புதுச்சேரியில் வானவேடிக்கை - French Revolution Day

புதுச்சேரி: பிரெஞ்சு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

வானவேடிக்கை
author img

By

Published : Jul 16, 2019, 3:32 PM IST

1789ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி ஃபிரான்ஸ் நாட்டிலிருந்த மன்னராட்சியை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சி நிறுவப்பட்டது. இந்நாள் வரலாற்றில் ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.

ஃபிரான்ஸ் நாட்டின் ஜன்னல் என்று முன்னாள் பிரதமர் நேருவால் வர்ணிக்கப்பட்ட புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் வழக்கமான உற்சாகாத்துடன் இந்தாண்டும் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி இன்று ஃபிரான்ஸ் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் துணை தூதர் கேத்ரின் ஸ்வார்ட், முதலமைச்சர் நாராயணசாமி, தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இரவு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஃபிரான்ஸ் தூதரகம் முன்பு வண்ணமயமான வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வானத்தில் சிதறிய மத்தாப்பு சிதறல்களைக் கண்டு பார்வையாளர்கள் ஆரவாரத்தோடு கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் வானவேடிக்கை

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த வானவேடிக்கை நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கனோர் கண்டு ரசித்தனர்.

Intro:பிரான்ஸ் தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்ற வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சி ... வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கண்டு ரசிப்பு...
Body:புதுச்சேரி 15-07-19
பிரான்ஸ் தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்ற வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சி ... வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கண்டு ரசிப்பு...

கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஜன்னல் என்று பண்டித நேருவால் வர்ணிக்கப்பட்ட புதுச்சேரியில் பிரெஞ்ச் தேசிய தினம் வழக்கமான உற்சாகாத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இன்று பிரெஞ்ச் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரெஞ்ச் துணை தூதர் கேத்ரின் ஸ்வார்ட், முதலமைச்சர் நாராயணசாமி, தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து இரவு கடற்கரை சாலை பிரெஞ்ச் தூதரகம் முன்பு வண்ணமயமான வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. வானத்தில் சிதறிய மத்தாப்பு சிதறல்களை கண்டு பார்வையாளர்கள் ஆரவாரத்தோடு கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கனோர் கண்டு ரசித்தனர்.Conclusion:பிரான்ஸ் தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்ற வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சி ... வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கண்டு ரசிப்பு...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.