ETV Bharat / bharat

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்கும் என்ஐஏ!

author img

By

Published : Jun 15, 2020, 7:25 AM IST

டெல்லி: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் தான்யா பர்வீன் என்பவரை மத்தியப் புலனாய்வு முகமை காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகிறது.

NIA Kolkatta LeT
NIA Kolkatta LeT

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தான்யா பர்வீன். இவர், பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், பர்வீனை ஜூன் 12ஆம் தேதி 10 நாள்கள் காவலில் எடுத்துள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த குழு ஒன்று இவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் 20ஆம் தேதி தான்யா பர்வீனை காவல் துறையினர் 14 நாள்களில் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

தான்யா பர்வீன் வங்க தேசத்தைச் சேர்ந்தவர் என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ. பட்டப்படிப்பு படித்துவந்த காலத்தில்தான் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தான்யா தொடர்பில் இருந்துவந்ததாகத் தெரிகிறது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீதுடன் தான்யா பர்வீன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வன்முறையைத் துண்டும்வகையில் பேசிவந்த இவரிடமிருந்து பாகிஸ்தான் சிம் கார்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன.

பயங்கரவாதிகளிடமிருந்து தான்யாவுக்கு ஹவாலா வந்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய தேசியமாக்கும் நோக்குடன் இவர் செயல்பட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஏஜிஆர் வரையறையில் அவசர மாற்றம் தேவை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.