ETV Bharat / bharat

தவீந்தர் சிங் வழக்கில் மேலும் ஒருவர் கைது

author img

By

Published : Apr 30, 2020, 12:46 PM IST

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த தவீந்தர் சிங் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Davinder singh
Davinder singh

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த நவின் பாபு, வழக்குரைஞர் இர்பான் மிர் ஆகியோர் தெற்கு காஷ்மீரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர். பயங்கரவாத அமைப்புடன் தவீந்தர் சிங்குக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், பயங்கரவாதியாக சந்தேகிக்கப்படும் தாரிக் அகமது மீர் என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு வாகனங்களை வழங்கி இவர் உதவியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து முகமையின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "பல காலமாகவே பயங்கரவாதிகளுடன் தாரிக் அகமது மீர் தொடர்பில் இருந்துள்ளார். பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். தவீந்தர் சிங்குடனும் தாரிக் தொடர்பில் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல் துறையைச் சேர்ந்த மற்றவர்களுடன் தாரிக் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வழக்கு தொடர்பாக பல கைது நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: காட்டு காளானை சாப்பிட்டதில் மேலும் இருவர் உயிரிழப்பு: பலருக்கு தீவிர சிகிச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.