நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும் இந்த ஆணையம் புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
அதன்படி நெடுஞ்சாலைத் துறையின் கீழ் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள், திட்டங்களை விரைந்து முடித்துவைக்க மூன்று நிபுணர் குழுக்களை அமைத்துள்ளது. இந்தக் குழு தற்போதுள்ள அனைத்து சிக்கல்களையும் ஆறு மாதத்திற்குள் தீர்த்துவைக்க முடிவெடுத்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 108 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை சட்டப்பூர்வமாக கையாண்டு விரைவில் தீர்த்து வைக்கும் நடவடிக்கையை முதற்கட்டமாக இந்த ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. இந்த நிபுணர் குழு ஐந்து கட்ட அமர்வு மேற்கொண்டு ஆலோசனைக் கூட்ட அறிக்கையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கொடுக்கவுள்ளது.
இதையும் படிங்க: புகார் கொடுக்க வந்தவரிடம் கையூட்டு: காவலர்கள் மீது வழக்கு!