2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கைக் கூட்டதொடர் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியிலுள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் நடந்தது. இதில் பொருளாதார அறிஞர்கள், பெருநிறுவன முதலாளிகள், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் (வர்த்தகம்), நிதின் கட்கரி (சாலைப் போக்குவரத்து), நரேந்திர சிங் தோமர் (வேளாண்மை) உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இதில், நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த், பிரதமரின் பொருளாதார ஆலோசனை கலந்தாய்வின் தலைவர் விவேக் தேவ்ராய் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
எனினும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளது.
இதுமட்டுமின்றி, 'நிர்மலாவை கண்டுபிடியுங்கள்' என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்தது. அதில், 'ஒரு பெண்ணின் வேலையை செய்ய இத்தனை ஆண்களா?' எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
-
Here's a suggestion, next budget meeting, consider inviting the Finance Minister. #FindingNirmala https://t.co/wKV35GTI04
— Congress (@INCIndia) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's a suggestion, next budget meeting, consider inviting the Finance Minister. #FindingNirmala https://t.co/wKV35GTI04
— Congress (@INCIndia) January 9, 2020Here's a suggestion, next budget meeting, consider inviting the Finance Minister. #FindingNirmala https://t.co/wKV35GTI04
— Congress (@INCIndia) January 9, 2020
நிதி ஆயோக் தலைமையகத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது நிர்மலா சீதாராமன் பாஜக அலுவலகத்தில் உயர்மட்ட தலைவர்களுடன் மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். 2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்கிறார்.
இதையும் படிங்க: தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக மம்தா பானர்ஜி பேரணி!