எய்ம்ஸ் - கரோனா தடுப்பு மருந்து மனிதர்கள் மீது சோதனை:
கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இன்று முதல் மனிதர்கள் மீது சோதனை செய்யவுள்ளது.
மதுரையில் இன்று குடிநீர் விநியோகம் இல்லை:
வைகை குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இல்லை என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா விமான சேவைகள் ரத்து:
கரோனா பரவல் தீவிரமடைந்து வரும் காரணத்தால் மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் இன்று முதல் ஜூலை 29ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவையில் முழு ஊரடங்கு:
மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் காரணத்தால், இன்று மாலை 5 மணி முதல் ஜூலை 27 மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இராசாமணி அறிவித்துள்ளார்.