புதிய கல்விக் கொள்கை: முதலமைச்சர் ஆலோசனை
புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
நோக்கியா c3 ஸ்மார்ட்போன் அறிமுகம்
எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று நோக்கியா c3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று முதல் அயோத்தி கோயில்கள் திறப்பு
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை போற்றும் விதமாக அனைத்து கோயில்களிலும் விளக்கேற்றி பூஜை செய்யும்படி உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி இன்று அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு, பூஜைகள் மேற்கொள்ளப்படும்.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வடக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக அதிகம் வாய்ப்புள்ளதென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்ட படிப்புக்கு விண்ணப்பம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் சட்ட படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.