இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் மும்பை மற்றும் சென்னை நகரங்களிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு சில வாரங்களுக்கு முன் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மும்பை, சென்னை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலும் 38 வயதான செய்தியாளர் ஒருவருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என்றும் விரைவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அகமதாபாத்தில் பணிபுரியும் இரண்டு பத்திரிகையாளர்களுக்கும் சில நாள்களுக்கு முன் கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக அகமதாபாத் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 3,301 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,181 பேர் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய்ப்பால் மட்டுமே குடித்து கரோனாவை வீழ்த்திய மூன்று மாதக் குழந்தை!