புதுச்சேரி அரசியலில் தொண்டர்கள் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தவர் கண்ணன். இவர், இரண்டு ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதற்கிடையில் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள சூழலில் தீவிர அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள கம்பன் கழகத்தில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் புதுச்சேரி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
அப்போது பேசிய அவர்,
"புதுச்சேரியில் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன, விலைவாசி உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் தான் காரணம் என சுட்டிக்காட்டினார். புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் துணையோடு நில அபகரிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது." எனக் கூறினார்.
மேலும், நடைபெறவுள்ள காமராஜ் நகர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் யார் வேட்பாளர் என விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.