புதுச்சேரி உதவி தேர்தல் அதிகாரி சக்திவேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் பதினொரு ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிக்கு புறம்பாக கொண்டு செல்லப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
புதுச்சேரியில் வாக்களிக்க செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி புரிய ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் சக்கர நாற்காலி மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் துறை சார்பில் பறக்கும் படையினர் புதுச்சேரி எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தேர்தல் அலுவலர் சக்திவேல் குறிப்பிட்டார்.