ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு அமரவாதி மட்டுமல்லாமல் விசாகப்பட்டிணம், கர்னூல் ஆகிய நகரங்களும் தலைநகராக செயல்படும் என்ற தீர்மானம் ஆந்திர சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மூன்று தலைநகருக்கான பிரச்னையே ஓயாத சூழ்நிலையில், அடுத்த அதிரடியாக 25 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று ஆந்திர அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதன்படி 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏற்ப புதிதாக 25 மாவட்டங்கள் உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாவட்டங்கள் உருவாக்கத் தெளிவான வழிமுறைகள் பின்பற்றப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக, பிராந்திய வளர்ச்சிய வாரியங்கள் உருவாக்கப்பட்டு, வாரிய உறுப்பினர்கள் வழங்கும் ஆலோசனைகளுக்கு ஏற்ப புதிய மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஜெகன்மோகன் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஜெகன், "மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தவேண்டும். இதுபோன்ற கூட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்தவேண்டும் என்பதற்காகதான் அவர்களும் இந்த வளர்ச்சி வாரியங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜிர்வாலை எதிர்கொள்ள பாஜகவின் புதிய ஆயுதம்!