டெல்லி: மகாத்மா காந்தி குறித்த புதிய புத்தகத்தை ஆர்எஸஎஸ் தலைவர் மோகன் பகவத், ஜனவரி 1ஆம் தேதி வெளியிட உள்ளார்.
இந்தப் புத்தகம் காந்தியடிகளின் கையெழுத்து பிரதிகளில் உள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதாவது மகாத்மா காந்தியடிகளின் கையெழுத்து பிரதியான, “ஹிந்த் ஸ்வராஜ்” நூலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காந்தி கொள்கை ஆய்வுகளுக்கான மைய நிறுவனர் இயக்குநரும் அதன் நிறுவனர் தலைவருமான சீனிவாஸ் கூறுகையில், “இதனை நாங்கள் பெரும்பாலும் அவரது சொந்த வார்த்தைகளிலேயே சொல்கிறோம்.
காந்தி எப்போதுமே தன்னை ஒரு இந்துவாகவே உணர்ந்தார். வேறுபட்ட கலாசாராங்கள் கொண்ட நபர்களுடன் அவருக்கு இருந்த தொடர்பு இந்து மதத்தின் மீதான நம்பிக்கையை ஆழப்படுத்தியது” என்றார்.
முன்னதாக 2011 ஆம் ஆண்டில் "ஹிந்த் ஸ்வராஜ்" இன் பதிப்பு ஒன்றை வெளியிட்டனர். இது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் குஜராத்தின் அப்போதைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி ஆகியோரால் வெளியிடப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'ஆர்எஸ்எஸ் களஞ்சியம் மாதவ் கோவிந்த் வைத்யா'- மோகன் பகவத் உருக்கம்!