ETV Bharat / bharat

மறுமலர்ச்சியாகும் இந்திய - இலங்கை உறவு!

author img

By

Published : Dec 3, 2019, 11:37 PM IST

இலங்கை அதிபரின் இந்திய வருகை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Gotabaya
Gotabaya

புராண இதிகாச காலங்களிலிருந்தே இலங்கையுடன் இந்தியா நட்பைப் பேணி காத்து வருகிறது. இலங்கையின் 12 விழுக்காடு மக்கள் தமிழர்கள் ஆவார்கள். அந்நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் காக்க இந்திய அமைதிப் படை முயன்றது. மேற்கூறிய இந்த இரு காரணங்கள் தான் இந்திய, இலங்கை இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தியது. பல ஆண்டுகளாக இலங்கைக்கு இந்தியா உதவிவரும் நிலையில், 2005ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து, சீனாவின் நட்பு வட்டாரத்தில் இலங்கை நுழைந்தது. விடுதலை புலிகளுக்கு எதிராக ராஜபக்ச வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தனக்கு எதிரிகளே இல்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 2015ஆம் ஆண்டு அவர் தோல்வியடைந்ததற்கு இந்தியாவே காரணம் என அவர் குற்றஞ்சாட்டினார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பெற்றுள்ளார். அந்நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுள்ளார்.

கோத்தபய
கோத்தபய

இதனால், இந்திய-இலங்கை உறவு பாதிக்குமா எனக் கேள்வி எழுந்தது. கோத்தபய இலங்கையின் அதிபராகப் பொறுப்பெற்ற அடுத்த நாளே பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் வழியாக அவருக்கு இந்தியா வரும் அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பை ஏற்று அவரும் இந்தியா வந்து சென்றார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாக கோத்தபய தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக இது அமைந்தது. சீனாவின் முதலீடுகளுக்கு மாற்றாக இந்தியாவும் மற்ற நாடுகளும் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். பயங்கரவாத எதிர்ப்புக்கு ரூ. 360 கோடியும் வளர்ச்சிக்காக ரூ. 2870 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய உறவை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோத்தபய-மோடி
கோத்தபய-மோடி

இரு வாரங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தல் இலங்கையில் வாழும் பல பிரிவுகளுக்கு பயத்தை உண்டாக்கியது. மைத்திரிபால சிறிசேன உருவாக்கிய அரசியல் பிரச்னை நாட்டின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பெற்றார். ஈஸ்டர் திருநாளன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இலங்கையை சோகத்தில் ஆழ்த்தியது. பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்னதாகவே இந்திய, அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை நாடாளுமன்ற குழு, தன் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் மீது குறைகூறியது. நாட்டில் அதிகரிக்கும் ஐஎஸ் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிங்கள மக்கள் கோத்தபய ராஜபக்சவை அதிபராகத் தேர்ந்தெடுத்தனர்.

கோத்தபயவுக்கு எதிராகப் போட்டியிட்ட சஜித் பிரமேதாசவுக்கு ஆதரவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் வாக்களித்தனர். கோத்தபயவின் நடவடிக்கைகள் யாவும் பயங்கரவாதத்தைக் கட்டுபடுத்துகிறேன் என்ற பேர்வழியில் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் என்பதால், அவர்கள் சஜித்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சிங்கள மக்களின் ஆதரவோடு அதிபரான கோத்தபய தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவும் செயல்பட முடியாது.

வடக்கில் வாழும் மக்கள் அதிகார குவியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைவரும் ஏற்றுக்கொண்ட மைத்திரிபால எவருக்கும் நன்மை செய்யவில்லை. சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் 13ஆவது சட்டத்திருத்தத்தினை நிறைவேற்ற முடியாது என கோத்தபய தெரிவித்துள்ளார். அதற்குப் பதில், அனைவருக்குமான வளர்ச்சியில் ஈடுபடவுள்ளதாக கோத்தபய கூறியுள்ளார். சிங்கள, தமிழர்களுக்கு இடையேயான பிரச்னையைத் தீர்ப்பதே கோத்தபயவின் சவாலாக இருக்கும்.

தற்போது, ஐஎஸ் பயங்கரவாதத்தால் இலங்கை பாதிப்படைந்துள்ளது. ஈஸ்டர் திருநாள் பயங்கரவாத சம்பவத்தால் இலங்கை சுற்றலா பாதிப்படைந்துள்ளது. இது இலங்கைக்கு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. 4.5 விழுக்காடு இருந்த இலங்கையின் ஜிடிபி வளர்ச்சி தற்போது 2.5 விழுக்காடாக குறைந்துள்ளது. 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி குறைந்துள்ளது. ஜிடிபியில் 75 விழுக்காடு கடனாக உள்ளது.

இதனால், சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை நம்பியே இந்தியா உள்ளதால், இந்த சமயத்தில் இலங்கைக்கு உதவுவது கடினமாக மாறியுள்ளது. தமிழர்களின் நலனுக்காகவும் எதிர்கால நலனுக்காகவும் இலங்கையுடனான உறவை இந்தியா மேம்படுத்திகொள்வதற்கான கட்டாயத்தில் உள்ளது.

இதையும் படிங்க: பாலியல் சம்பவங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்!

Intro:Body:

New Bonding of Old Friendship

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.