ETV Bharat / bharat

20 மொழிகளில் வெளியாகியுள்ள மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்! - இந்திய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 10 வெளிநாட்டு மொழிகள், 10 இந்திய மொழிகள் என, மொத்தம் 20 மொழிகளில் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி
author img

By

Published : May 31, 2020, 8:29 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் குழந்தைப் பருவத்தின் அரிய புகைப்படங்கள் தொடங்கி, அதிகம் அறியப்படாத வாழ்க்கை நிகழ்வுகள் வரை அடங்கிய, 'நரேந்திர மோடி ஹர்பிங்கர் ஆஃப் ப்ராஸ்பரைட்டி அண்ட் அப்போசில் ஆஃப் வேர்ல்ட் பீஸ்' (Narendra Modi Harbinger of Prosperity & Apostle of World Peace) எனும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களால் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கின் மத்தியில், இணையம் வழியாக நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டு நிகழ்வு, இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆதிஷ் சி. அகர்வாலா தெரிவித்துள்ளார்.

இந்தப் புத்தகத்தை சர்வதேச நீதிபதிகள் கவுன்சிலின் தலைவரும், அகில இந்திய பார் அசோசியேஷனின் தலைவருமான அகர்வாலாவும், அமெரிக்க எழுத்தாளரும், கவிஞருமான எலிசபெத் ஹொரனும் இணைந்து எழுதியுள்ளனர்.

மோடியின் குழந்தைப் பருவம், ஆரம்பகால வாழ்க்கையின் அரிய புகைப்படங்களுடன் தொடங்கி, அவரது அதிர்ச்சியூட்டும் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் பாதை வரை, தேநீர் பரிமாறிய சிறுவனாக இருந்து நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது வரை, அதிகம் அறியப்படாத நிகழ்வுகளும், குறைவாக அறியப்பட்ட உண்மைகளும் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளதாக, புத்தக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான புத்தக வடிவம், இணையப் புத்தகம் என இரு வடிவங்களிலும் கிடைக்கும் இப்புத்தகம், ஆங்கிலம், அரபு, டச்சு, பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய, மாண்டரின், ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய 10 வெளிநாட்டு மொழிகள், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 10 இந்திய மொழிகள் என, மொத்தம் 20 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒரு வருடத்தை நிறைவு செய்த மோடி 2.0: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.