இந்திய ராணுவத்தை உருவாக்கியவரும், சுதந்திர போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் கட்சியினர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள் விழா; கொல்கத்தா செல்கிறார் மோடி