ETV Bharat / bharat

மீண்டும் இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையைத் தூண்டும் நேபாளம்! - கார் மாநிலத்தின் எல்லைப் பகுதி

பட்னா: பிகார் மாநிலத்தில் உள்ள இந்தியாவுடனான எல்லைப் பகுதியை, தங்களுக்குச் சொந்தமானதாகப் பலகை வைத்து நேபாள ராணுவத்தினர் மீண்டும் எல்லைப் பதற்றத்தை அதிகரித்துள்ளனர்.

nepal-puts-up-board-claiming-area-under-no-mans-land-later-removes-it

author img

By

Published : Jul 8, 2020, 1:24 PM IST

பிகார் மாநிலம், ரக்சூல் மாவட்டத்திலுள்ள பிர்குஞ்சி பகுதியில் இந்திய - நேபாள எல்லை அமைந்துள்ளது. நீண்ட காலமாக இந்தப் பகுதியை சொந்தம் கொண்டாடிய நேபாளம் நேற்று (ஜூலை 7) மீண்டும், ரக்சூல் பகுதியில் உள்ள நிலங்கள் தங்களுக்குச் சொந்தமானது எனப் பலகை வைத்து பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பின்னர், நேபாள ராணுவத்தினருடன் சாஷாஸ்திர சீமா பால் அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அந்தப் பலகைகள் அகற்றப்பட்டன.

கிடைத்த தகவலின்படி, நேபாள காவல் துறையினர் நேற்று(ஜூலை 7) பிகார் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் உள்ள மைத்ரியேயி பாலத்தில் (நண்பர்கள் பாலம்) பலகை ஒன்றை வைத்ததாகவும், அதில் இந்த நிலம் நேபாளத்திற்குச் சொந்தமானது என எழுதியிருந்ததாகவும் தெரிகிறது.

எல்லைப் பகுதியில் உள்ள நிலங்கள் யாருக்கும் சொந்தமில்லை என்றபோதிலும், பாலத்தில் இதுபோன்ற பலகை வைத்ததும்; அதில், நேபாள அலுவலர்கள் சிலரின் தொலைபேசி எண்கள் குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள அரசின் இந்த நடவடிக்கையை பிகார் மாநில மக்கள் எதிர்க்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, காவலர்கள் நேபாள அலுவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தற்காலிகமாக நிலைமையை சரிசெய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.