இந்தியா - நேபாளம் இடையே எல்லை பிரச்னை நீடித்துவரும் நிலையில், பிகாரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு வரவேண்டிய நதிநீரை நேபாளம் தடுத்து நிறுத்தியுள்ளது. முன்னதாக, லிபுலேக் எல்லைப் பகுதியில் புதிய சாலைப் போக்குவரத்தை இந்தியா தொடங்கியது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு உருவாகியுள்ளது.
லிபுலேக் பகுதியில் இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக அதிருப்பதி அடைந்துள்ளதாகத் தெரிவித்த நேபாளம், அந்நாட்டு எல்லையை இந்தியா தனது பகுதியாக சித்தரிக்கிறது என குற்றஞ்சாட்டியது. மேலும், மேற்கண்ட பகுதியை நேபாளுடன் சேர்ந்த பகுதி என்பதை குறிக்கும் விதமாக வரைபடம் வெளியிடப் போவதாக நேபாளம் தெரிவித்தது.
இதையும் படிங்க: 'மூச்சு விட முடியல' என்று கதறிய பின்னரும் விடாத போலீஸ் - உயிரிழந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்