ETV Bharat / bharat

சர்சைக்குரிய பகுதியில் 4 ஹெலிபேட்கள் கட்டும் நேபாளம்..!

டெல்லி: இந்திய- நேபாள எல்லையில் சர்சைக்குரிய பகுதியான வால்மீகுநகரில் நேபாளம் நான்கு ஹெலிக்காப்டர் தரையிறங்கு தளங்களை கட்டிவருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

சர்சைக்குரிய பகுதியில் 4 ஹெலிபேட்கள் கட்டும் நேபாளம்..!
சர்சைக்குரிய பகுதியில் 4 ஹெலிபேட்கள் கட்டும் நேபாளம்..!
author img

By

Published : Aug 6, 2020, 1:17 PM IST

சசசுத்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி) எனும் இந்திய -நேபாள எல்லையை பாதுகாக்கும் மத்திய அரசின் ஆயுதப்படை உளவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சுஸ்தாவின் அருகே நேபாளத்தில் நான்கு ஹெலிக்காப்டர் தரையிறங்கு தளம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அவற்றில் ஒரு ஹெலிபேட் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்திற்காக நேபாளம் பத்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

இது குறித்து எஸ்.எஸ்.பி. -யின் 21ஆவது படைப்பிரிவின் கமாண்டர் ராஜேந்திர பரத்வாஜ் கூறுகையில், ஒரு மாதத்திற்கு முன்னரே, சர்சைக்குரிய பகுதியில் ஹெலிபேட் கட்ட உள்ளது குறித்து புலனாய்வில் வெளிவந்தது என்றும், இது குறித்து ஏற்கனவே உயர் அலுவலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

பாதுகாப்பில் ஈடுபடும் எஸ்.எஸ்.பி
பாதுகாப்பில் ஈடுபடும் எஸ்.எஸ்.பி

மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளர் கருத்துப்படி பார்த்தால், “நேபாளத்தால் கையகப்படுத்தப்பட்ட கந்தக் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சர்சைக்குரிய பகுதி, பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், நேபாளின் மேற்கு நாவள்பரசி மாவட்ட பகுதியாகவும் உள்ளது” என்றார்.

இந்த ஹெலிபேட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருள்கள், மருந்துப் பொருள்கள், உணவு வழங்குவதற்குதான் ஏற்படுத்தப்பட்டுள்ளது என நேபாளம் விளக்கமளித்துள்ளது.

இதையும் படிங்க...ஹிரோஷிமா அணு ஆயுதத் தாக்குதல் 75 ஆண்டு - கற்க வேண்டிய பாடம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.