ETV Bharat / bharat

”நேரு ஒரு பெண்பித்தர், மோடி பெண்களை சீண்டாதவர்” - நேரு

லக்னோ: மோடியை பெண் ஆசைகாட்டி வீழ்த்திவிடலாம் என நினைக்காதீர்கள், ஏனென்றால் அவர் மோடி; நேரு அல்ல என்று உத்தர பிரதேச எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார்.

Vikram Singh Saini
author img

By

Published : Sep 18, 2019, 2:12 PM IST

பாஜகவில் உள்ள சில அரசியல்வாதிகள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் எந்த எல்லைக்கும் சென்று அவர்களை இழிவுபடுத்துவார்கள். அந்த வகையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விக்ரம் சிங் சைனி இன்னும் ஒருபடி மேலே சென்று நேருவையும் அவர் குடும்பத்தாரையும் சேர்த்து இழிவுபடுத்தியுள்ளார்.

மோடியின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விக்ரம் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தைக் கூறியிருந்தார். அதில், ”பாரத தாயின் புகழை உயர்த்தும் நோக்கில் செயல்படுகிறார் மோடிஜி. மோடி பாரத தாயின் மகன்” என எழுதியுள்ளார். மேலும், அந்தப் பதிவை முடிக்கும்போது , மோடியை பெண் வழியில் வீழ்த்திவிடலாம் என நினைக்காதீர்கள், ஏனென்றால் அவர் மோடி; நேரு அல்ல, என்று எழுதியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் விக்ரம் சிங்கிடம் கேள்வியெழுப்பியதற்கு அவர், “மோடியை ஒரு பெண் அரசியல்வாதி அவர் மீது ஆசை கொண்டார். ஆனால், மோடி அதை பொருட்படுத்தாமல் நாட்டை மட்டும் கவனித்தார். ஏனென்றால் அவருக்கு நாட்டைத் தவிர வேறெதுவும் தெரியாது. ஜவஹர்லால் நேரு பெண்பித்தராக இருந்ததால்தான், பிரிட்டிஷினரின் துணையோடு இந்திய நாட்டைப் பிரித்தார். அவரைப்போலவே அவர் பேரன் ராஜிவ் காந்தியும் இத்தாலி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இப்படிதான் நேரு குடும்பம் செயல்பட்டு வருகிறது” என சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார்.

விக்ரம் சிங் இப்படி பேசுவது புதிதல்ல, அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.