ETV Bharat / bharat

வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் அரசின் அலட்சியமே! - அசாம் மாநிலத்தில் வெள்ளம்

உலக வங்கியின் ஆய்வு 2050வாக்கில் இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் 50 விழுக்காடு வரை குறையக் கூடும் என்று தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் உயிர் மற்றும் சொத்து இழப்பு மிக அதிகமாக இருக்கும், முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது.

வெள்ளம்
வெள்ளம்
author img

By

Published : Jul 21, 2020, 5:14 PM IST

கடந்த ஆண்டு, இதே நேரத்தில் பிகாரிலும், ஆகஸ்ட் மாதத்தில் ஒடிசா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வெள்ளம் காரணமாக பேரழிவைச் சந்தித்தன. தற்போது அசாம் மாநிலமும் வெள்ளம் காரணமாக அதேபோல் தவிக்கிறது. பிரம்மபுத்திரா, தன்சிரி, ஜெய பாராலி, கோவிலி, பெக்கி ஆகிய ஆறுகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

மாநிலத்தின் 27 மாவட்டங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 80 மனித உயிர்களைப் பறித்த வெள்ளம், 430 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய விலங்குகள் பூங்காவின் 95 விழுக்காட்டுப் பரப்பளவை வெள்ளத்தில் மூழ்கடித்து காட்டு விலங்குகள் மற்றும் காண்டாமிருகங்களின் உயிர்களையும் பறித்துள்ளது.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், 64 ஆயிரம் வரை கரோனா தொற்றுகள் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. கூடுதலாக, பேரழிவு ஏற்படுத்திய வெள்ளம் இரண்டரை லட்சம் ஹெக்டேர் பயிர்களைச் சேதப்படுத்தி, மேலும் டெங்கு போன்ற ஜப்பானிய என்சைபாலிடிஸ் நோய்க்கு காரணமான கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடத்தையும் உருவாக்கியுள்ளது.

ஆயினும்கூட, பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் 12% (4 கோடி ஹெக்டேர்) நிலத்திற்கு வெள்ள அச்சுறுத்தல் இருப்பதாகவும், 52 விழுக்காடு இயற்கைப் பேரழிவுகள் வெள்ளத்தால் ஏற்படுகின்றன என்றும் கண்டறியப்பட்டது. சரியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாத நிலையில், பல மாநிலங்களின் அரசுகள் மத்திய அரசின் உதவியைக் கோருகின்றன. 1953 முதல் 2017ஆம் ஆண்டு வரை சுமார் 1 லட்சத்து ஏழாயிரத்து மக்கள் வெள்ளத்தில் இறந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. வெள்ளம் காரணமாக சுமார் 3.66 லட்சம் கோடி ரூபாய் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்கள் காரணமாக வெள்ளம் அதிகரித்து பெரிய நகரங்களைத் தாக்கிவருகிறது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கங்கள் இனி புறக்கணிக்கவோ தாமதிக்கவோ முடியாது.

உலக வங்கியின் ஆய்வு 2050வாக்கில் இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் 50 விழுக்காடு வரை குறையக் கூடும் என்று தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் உயிர் மற்றும் சொத்து இழப்பு மிக அதிகமாக இருக்கும், முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது. குறுகிய காலத்தில் அதிக மழைப் பொழிவு, தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்றவாறு போதுமான வடிகால் அமைப்பு இல்லாதது, நீர்த்தேக்கங்களை முறையாகப் பராமரிக்காதது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் இல்லாதது ஆகியவையே வெள்ளத்திற்கான காரணங்கள் என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

1960களில் கட்டப்பட்ட வெள்ளத் தடுப்பு அமைப்புகள் 1990க்குள் அதன் செயல்திறனை இழந்துவிட்டன. 2000ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், வெள்ளம் அசாமின் வளத்தைப் பெரிதும் பாதிக்கிறது. 2004ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு 500 பேர் உயிரிழந்த பின்னர், நிரந்தர தீர்வைக் கண்டறிய ஒரு குழுவை மத்திய அரசு நியமித்தது. ஆனால், அந்த அறிக்கை தூசி படிந்து கிடக்கிறது.

பிரம்மபுத்திராவின் ஆற்றுப் படுக்கையிலிருந்து, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வண்டல் மண்ணை அகற்றும் திட்டம், அதன் ஆரம்பக் கட்டத்தைக்கூட தாண்டவில்லை. நாடு முழுவதும் இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்ள 14ஆவது நிதி ஆணையத்தின் ஒதுக்கீடு ஐந்து ஆண்டுகளுக்கு 61,219 கோடி ரூபாயாகும். உயிர் மற்றும் சொத்து இழப்புகளைக் குறைக்க நிதி ஆணையம் எந்த அளவிற்கு ஒதுக்கீடு செய்யும் என்று நமக்குத் தெரியாது.

வெள்ளத்தைத் தடுக்க செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் வெள்ளத்தால் ஏற்படும் எட்டு ரூபாய் சேதத்தைத் தடுக்க உதவும் என்று உலக வங்கி கூறியுள்ளது. கடல் மட்டத்திற்கு கீழ் அமைந்துள்ள நெதர்லாந்து, அந்த நாட்டின் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 2/3 பகுதிகளின் நிதி ஆதாரங்களைக் கொண்டு, வலுவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்து உலகிற்குப் படிப்பினைகளை அளித்துவருகிறது. இந்தியா அந்த மாதிரியான அடிப்படைகளை மேற்கொண்டு வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: இந்திய அணுசக்தி துறையின் நோக்கங்களும் அதன் சவால்களும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.