உத்தரப் பிரதேசத்தில் 47ஆவது அனைத்து காவல் துறை அறிவியல் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (29/11/19) நடைபெற்றது இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்திய நாட்டில் கூட்டாட்சி முறை நடைபெற்று வருகிறது அதில் உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது முழுமையான அணுகுமுறையுடன் இருக்க வேண்டும். நாட்டில் நடக்கும் எல்லை தாண்டிய ஊடுறுவல்கள், கள்ள நோட்டு, ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் விலங்குகள் கடத்தல் ஆகியவற்றை எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது. மேலும் இணையத்தில் நடத்தப்படும் மறைமுகமான தாக்குதல் உள்ளட்டவையை சமயோஜிதமாக சமாளிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகே உள்நாட்டு பாதுகாப்பு என்பது சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதை வலுப்படுத்துவதின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஐந்து ட்ரில்லியன் டாலர்களாக வரும் 2024ஆம் ஆண்டிற்குள் உயரக்கூடும்.
நாம் இதை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடும்போது பல சக்திகள் நம்மை தடுக்க முற்படக்கூடும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நிச்சயம் நம் நாட்டின் எதிர்காலம் மாற்றப்படும் அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க: 35 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயத்தை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்...