ETV Bharat / bharat

உடலிலுள்ள இணை நோய்களால் கரோனா ஏற்படும் அபாயம் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் - கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம்

டெல்லி: உடலில் இருக்கும் வேறு நாள்பட்ட நோய்கள் இருந்தால், கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Union health and family welfare minister  Harsha Vardhan
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
author img

By

Published : Jul 29, 2020, 10:56 AM IST

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம், இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநாடு ஒன்றை நிகழ்த்தியது. காணொலி காட்சி மூலம் நிகழ்ந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:

"கல்லீரலில் வைரஸ் தொற்று ஏற்படுவது தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுபற்றி மருத்துவ சேவை புரிவோருக்கும், பொதுமக்களுக்கும் பெரிய அளவில் தெரிவதில்லை.

கல்லீரலில் பி மற்றும் சி வகை வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு, கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகவுள்ளது. தற்போது 80 விழுக்காடு வரையிலான பொதுமக்களுக்கு நாள்பட்ட கல்லீரல் பிரச்னையும், கல்லீரலில் வைரஸ் தொற்று தங்களுக்கு இருப்பதும் தெரியாமலேயே உள்ளனர்.

எனவே இதுபற்றி 'உரையாடல், பரிசோதனை, சிகிச்சை' என்ற முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பணிகளை கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அமைதியாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் பி மற்றும் சி வகையிலான கல்லீரல் வைரஸ் தாக்குதல் பற்றி இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைவரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'சானிடைசர் விற்பனை செய்ய உரிமம் தேவை இல்லை' - மத்திய அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.