உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இன்னும் இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலகம் முழுதும் உள்ள பல்வேறு மருத்துவர்கள் இதற்கான ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பால் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 540 பேர் குணமடைந்துள்ளனர். ஆயிரத்து 886 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கங்கை நீரை கொடுத்தால் குணப்படுத்த முடியுமா என்று மத்திய ஜல் சக்தி அமைச்சகம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு ஆலோசனை வழங்கி இருந்தது.
மேலும் கங்கை நீரில் "நிஞ்ஜா வைரஸ்" இருப்பதாகவும் விஞ்ஞானிகள் இதை பாக்டீரியோபேஜ்கள் என்று அழைப்பதாகவும் அது மனிதர்களை பாதிக்கும் வைரஸ்களை எதிர்க்கும் என்று ஜல் சக்தி துறையின் என்.எம்.சி.ஜி இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவிக்கையில், மத்திய ஜல் அமைச்சகம் அளித்த சான்றுகளின்படி கங்கை நீரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தாக கொடுப்பது தொடர்பாக மருத்துவ ஆய்வுகள் தொடங்குவதற்கு தற்போது கிடைத்திருக்கக்கூடிய சான்றுகள் வலுவாக இல்லை என்றும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19க்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி: சோடியம் நைட்ரேட் கரைசலை உட்கொண்டவர் உயிரிழப்பு!