மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து, மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் 'நீ அஞ்சாதே' என பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. 'நீ அஞ்சதே', 'ஹாய் சாதா ஹக்' என ஒரே பாடல் வீடியோவில் தமிழ், பஞ்சாபி என இரு மொழிகளில் வெளியாகிவுள்ளது. இந்த பாடலை பாகர்கவ் பிரசாத் இயக்கியுள்ளார். தமிழ் பாடல் வரிகளை கதிர் மொழியும் பஞ்சாப் வரிகளை ரிவி குமனான் எழுதியுள்ளார்.
இந்த பாடலில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கான நியாயமான விலையும், நீண்ட காலமாக அவர்களின் உழைப்புக்கு நியாயமான இழப்பீடும் மறுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு மட்டும் பிரச்னையானது இல்லை. உணவு சாப்பிடும் அனைவருக்கும் எதிரானது. நாம் அனைவரும் விவசாயிகளுக்கு கடமை பட்டியிருக்கிறோம். நாம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் என பாடலில் கூறியுள்ளனர்.