இரண்டு நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இன்று (31-10-2019) இந்தியா வரவுள்ளார். இவருடன் ஜெர்மனி அமைச்சரவையைச் சேர்ந்த 12 அமைச்சர்களும் இந்தியாவுக்கு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ஜெர்மன் நாட்டின் தூதர் வால்டர் ஜெ லின்டர் கூறுகையில், "இந்த சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு முதல் கால்பந்து வரை பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் சுமார் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் காஷ்மீர் குறித்து விவாதிக்கப்படுமா என்று கேள்விக்குப் பதிலளித்த அவர், இரு தலைவர்களுக்கும் மிகச் சிறந்த உறவு இருப்பதாகவும், ஆகவே எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்கள் விவாதிப்பார்கள் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் விருதை பெற மறுத்த கிரேட்டா தன்பெர்க்!