ETV Bharat / bharat

வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்கும் ஒரு லட்சம் மலையாளிகள் - kerala Matrimony

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு லட்சம் மலையாளிகள் தங்களின் வாழ்க்கை துணைக்காக காத்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Malayalis Looking for a life Partner
author img

By

Published : Oct 23, 2019, 11:35 PM IST

அண்டை மாநிலமான கேரளாவில், பிரபல கேரள மேட்ரிமோனி இணையதளம் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளத்தில் சுமார் ஒரு லட்சம் மலையாளிகள் தங்களின் வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 61 விழுக்காடு பேர் தங்களுக்கான சுயவிவரத்தை தானே தொடங்கியுள்ளனர். மீதமுள்ளவர்களில் 14 விழுக்காடு பேர் பெற்றோர் ஆவார்கள். மீதமுள்ளவர்கள் மணமகன் அல்லது மணமகளின் சகோதரன், சகோதரிகள் அல்லது நண்பர்கள் ஆவார்கள்.

58 விழுக்காடு பெண்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் 23-27 வயதிற்குள்பட்டவர்கள். காத்திருக்கும் 50 விழுக்காடு ஆண்கள் 26-30 வயதிற்குள்பட்டவர்கள் ஆவார்கள்.

இவர்களில் 30 விழுக்காடு ஆண்கள், 18 விழுக்காடு பெண்கள் சாதி மறுப்புத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலும் பட்டம், பட்டயம், பொறியியல் பட்டதாரிகள் ஆவார்கள்.

39 விழுக்காடு பெண்களும் 19 விழுக்காடு ஆண்களும் தங்களுக்கு வரும் மணமகன், மணமகள் பட்டமேற்படிப்பு படித்திருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இவர்களில் 82 விழுக்காட்டினர் தங்களின் செல்லிடப்பேசி (மொபைல்ஃபோன்) வாயிலாக திருமண இணையதளத்தில் பதிந்துள்ளனர். மாவட்டம் வாரியாக பார்க்கும்போது, எர்ணாக்குளம், திருச்சூர், கொல்லம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கேரள திருமண இணையதளத்தில் சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமான வரன்கள் உள்ளன.

கேரள இளைஞர்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

என்னதாங்க ஆச்சு நம்ம விஷாலுக்கு...? திருமணம் நடக்குமா, நடக்காதா...?

காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது...

இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் - இளம்பெண் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.