ETV Bharat / bharat

ஹத்ராஸ் கொடூரம் : பாஜக தலைவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள தேசிய மகளிர் ஆணையம்! - ஹத்ராஸ் இளம்பெண் மீது அவதூறு

டெல்லி: ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த பாஜக தலைவர் ரஞ்சீத் ஸ்ரீவாஸ்தவாவுக்கு தேசிய மகளிர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஹத்ராஸ் கொடூரம் : பாஜக தலைவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள தேசிய மகளிர் ஆணையம்!

author img

By

Published : Oct 7, 2020, 7:06 PM IST

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணுக்கு நீதிகேட்டு போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதே நேரத்தில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள நால்வருக்கு ஆதரவாக வலதுசாரி குழுக்களான பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ்., கர்ணி சேனா, பாஜக அமைப்பினர் கூடுகைகள் நடத்திவருகின்றனர்.

அத்துடன், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உயிரிழந்த இளம்பெண் மீது அருவருக்கத்தக்க குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.

அந்த வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பராதங்கியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரஞ்சீத் பகதூர் ஸ்ரீவாஸ்தவா ஆவணத்தோடு கூறிய அருவருக்கத்தக்க கருத்துக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

அவரது சர்ச்சைக்குரிய அந்தக் கருத்திற்குப் பதிலளித்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், "பாஜக பிரமுகர் ரஞ்சீத் பகதூர் ஸ்ரீவாஸ்தவா ஒரு தலைவராக கருதப்படுவதற்கு தகுதியற்றவர். அவரது பேச்சின் மூலம் அவர் ஒரு பழைமைவாதி என்பதும், ஆணாதிக்க மனநோயாளி என்பதும் தெரியவருகிறது.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் பெண்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட வக்கிரமான கருத்துகள் தொடர்பில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளிக்க வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருவருக்கத்தக்க சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிய ஸ்ரீவாஸ்தா மீது 44-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை, படுகொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது போன்ற குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.