நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்பின் தீவிரம் குறைந்துவந்தாலும் பல்வேறு மாநிலங்கள் தற்போது இரண்டாம் அலையை சந்தித்துவருகின்றன. குறிப்பாக நாட்டிலேயே அதிக பாதிப்புக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்ந்துவருகிறது.
இந்நிலையில், அங்கு ஆளும் சிவசேனா அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பாரத் பால்கே கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார். புனேவின் ரூபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவரின் உடல்நிலை மோசமானதையடுத்து நேற்று வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.
இருப்பினும் நோய் தாக்கத்தின் காரணமாக அவர் இன்று(நவ.28) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பால்கே மறைவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மறைந்த பாரத் பால்கே மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தர்பூர்-மங்கலவேதா தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 93.5 லட்சத்தை தாண்டிய கோவிட்-19 பாதிப்பு